கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 3 பேர் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்த உலகக்கோப்பையில் இதுவரை இந்தியா 2 முறை கோப்பையை வென்றுள்ளது. 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அப்போதைய கேப்டன் கப்பில் தேவ் தலைமையில் கோப்பையை கைப்பற்றியது. பிறகு 2011 ஆம் ஆண்டு நடைபெற்றப் போட்டியில் அப்போதைய கேப்டன் தோனி தலைமையில் கோப்பையைக் கைப்பற்றியது. அதை தொடர்ந்து இதுவரை இந்தியா சர்வதேச போட்டியில் கோப்பையைக் கைப்பற்றவில்லை.
இந்த ஆண்டு இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியிருந்தது. தற்போது அதில் 3 வீரர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் பேக்கப் வீரராக இருக்கும் சஞ்சு சாம்சன் உலக கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தவகல்கள் வெளியாகையுள்ளது. அவருடன் சேர்ந்து திலக் வர்மா மற்றும் பிரசித்தி கிருஷ்ணா ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும்.