தொழில் வளத்தைப் பெருக்கும் வேலை வாய்ப்பு, வேளாண் வணிக உலகளாவிய சந்தைகளை உருவாக்கும் நோக்கமோ இந்த ஊழல் திமுக அரசிற்கு இல்லை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவா் வெளிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழ் மொழியும் நம் தர்மமும் செழித்து வளர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் தென்காசியில், #EnMannEnMakkal பயணம் பெரும் திரளெனக் கூடியிருந்த பொதுமக்கள் சூழ சிறப்புடன் நடந்தேறியது. நமது புனித பூமியான காசி, முகலாயர் படையெடுப்புக்கு ஆளான போது, பாண்டிய மன்னர் கனவில் சிவபெருமானே தோன்றி, தக்ஷிண… pic.twitter.com/kMuxSNHpur
— K.Annamalai (@annamalai_k) September 5, 2023
தமிழ் மொழியும் நம் தர்மமும் செழித்து வளர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் தென்காசியில், ”என் மண் என் மக்கள்” பயணம் பெரும் திரளெனக் கூடியிருந்த பொதுமக்கள் சூழ சிறப்புடன் நடந்தேறியது.
நமது புனித பூமியான காசி, முகலாயர் படையெடுப்புக்கு ஆளான போது, பாண்டிய மன்னர் கனவில் சிவபெருமானே தோன்றி, தக்ஷிண காசி திருக்கோவிலை நிர்மாணிக்கச் சொன்னதாக, ஜடாவர்மன் பராக்கிரமப் பாண்டிய மன்னர் கல்வெட்டே எழுதி வைத்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக, சேர நாட்டுடன் நம்மை இணைக்கும் பகுதியாக தென்காசி விளங்குகிறது. திருக்குற்றாலத்துக்கு நுழைவாயிலாக இருக்கும் இம்மண், உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிற ஊர் ஆகும்.
தொழில் செய்யும் சமூகங்கள் நிறைந்து வாழும் இப்பகுதியில், பணப்பயிர் விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால், தொழில் வளத்தை பெருக்கும் வேலை வாய்ப்பையோ, வேளாண் வணிக உலகளாவிய சந்தைகளை உருவாக்கும் நோக்கமோ இந்த ஊழல் திமுக அரசிற்கு இல்லை.
தென்காசி இரயில் நிலையத்தின் தரத்தை உயர்த்திட அம்ரித் பாரத் ரயில் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு மட்டும் சுமார் 1650 கோடி ரூபாய் நமது மத்திய அரசுச் செலவிடுகிறது.
தென்காசி மாவட்டத்திற்கு திமுக கொடுத்த, ‘சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம், தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, தேங்காய் அடிப்படையிலான தொழிற்சாலை, ஆயிரப்பேரியில் வேளாண்மைக் கல்லூரி, புளியங்குடியில் எலுமிச்சையை அடிப்படையாக கொண்ட தொழிற்சாலை, கடையநல்லூரில் அரசுப் பாலிடெக்னிக் கல்லூரி, கால்நடை மருத்துவமனை ‘ என ஒரு தேர்தல் வாக்குறுதியையும் ஊழல் திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
தென்காசியில் திமுகவில் பெண் நிர்வாகிகளுக்கே பாதுகாப்பில்லை. இதை மறைக்க திமுக எத்தனை வேஷம் போட்டாலும் இனிமேல் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் சந்தர்ப்பவாத ஊழல் கூட்டணியான இந்தியக் கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியைத் தொடரச் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.