பாரதம் என்கிற குடும்பமாக ஒருங்கிணைந்து வாழ்வோம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.
தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, மிகுந்த தேசப்பற்று மிக்கவர். இதன் காரணமாக, தான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசியம் சார்ந்த கருத்துக்களை பேசுவதோடு, மாணவர்களுக்கு தேசிய உணர்வையும் போதிப்பார். அதேபோல, இந்தியா என்று அழைப்பதைவிட பாரதம் என்றே அழைத்து வருகிறார். இந்த சூழலில், ஜி20 உச்சி மாநாட்டுக்கு வருகை தரும் அயல் நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து கொடுக்கும் குடியரசுத் தலைவர், அதற்கான அழைப்பிதழில் “தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் எதிர்கட்சிகள், இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றப்போவதாக திசை திருப்பி வருகின்றனர். இந்த சூழலில்தான், இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அதாவது, ஆளுநர் வெளியிட்டிருக்கும் ஆசிரியர்கள் தின வாழ்த்துச் செய்தியில், வலிமையான, திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார் .
இது தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறமையையும், குணத்தையும் வடிவமைத்து வலிமையான மற்றும் திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய நமது ஆசிரியர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
#தேசியஆசிரியர்தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து வலிமை மற்றும் திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம். – ஆளுநர் ரவி pic.twitter.com/d1XiJ2DcnF
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 5, 2023
அதேபோல, கிருஷ்ண ஜெயந்தி தினமான இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஜென்மாஷ்டமி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! பகவான்கிருஷ்ணரின் நித்திய போதனைகள் நம் கடமைகளை சரியாகவும், நேர்மையாகவும் ஆற்ற தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும். பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம். ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள்” என்று தெரிவித்திருக்கிறார். ஆளுநர் பாரதம் என்கிற ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்திருப்பது தேசபக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறறிருக்கிறது.
#ஜென்மாஷ்டமி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! #பகவான்கிருஷ்ணரின் நித்திய போதனைகள் நம் கடமைகளை சரியாகவும் நேர்மையாகவும் ஆற்ற தொடர்ந்து ஊக்கமளித்து #பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம்.#ஜென்மாஷ்டமிவாழ்த்துக்கள் pic.twitter.com/Hv08H3HlP8
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 6, 2023