அண்ணாதுரை குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது நூறு சதவீதம் உண்மையே என தேவர் வரலாற்று ஆய்வாளர் நவமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்து தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக பாஜக சார்பில் கடந்த 11 -ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
கடந்த 1956 -ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ் சங்க விழாவின் தலைவராக பி.டி.ராஜன் இருந்தார்.
10 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், சொற்பொழிவுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில், அழைப்பிதழில் பெயரே இல்லாத முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது, பள்ளி மாணவி மணிமேகலை குழந்தை அருமையாக பேசினார். அவருக்கு ஒரு புத்தம் மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டீர்கள். இதுவே அந்த காலமாக இருந்தால், அந்தக் குழந்தைக்கு உமையவள் ஞானப்பால் கொடுத்ததால்தான் இப்படி பேசினார் என கதை கட்டியிருப்பார்கள் என கிண்டலாக பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒரு நாள் முன்னதாக நிகழ்வில் கலந்து கொண்ட பசும் பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா, அண்ணாதுரைக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
அவரது இந்த பேச்சு உண்மை என தேவர் வரலாற்று ஆய்வாளர் நவமணி தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக, எழுத்தாளர் பார்த்தசாரதி எழுதிய பல கோணங்களில் பசும்பொன் தேவர் என்ற புத்தகம் உள்ளிட்டவைகளை ஆதாரமாக எடுத்துக் கூறியுள்ளார்.
இதன் மூலம், தலைவர் அண்ணாமலை கூறியது முற்றிலும் 100 சதவீதம் உண்மை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.