இந்திய ஆடவர் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் ஜோடியான அர்ஜுன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல விளையாட்டு போட்டிகளில் ஆசிய கண்டத்திலுள்ள நாடுகள் பங்கேற்கின்றன. இதில் ஆடவர் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய அணி பங்குபெற்றது. இந்திய அணியின் சார்பாக அர்ஜுன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் பங்குபெற்றனர். இருவரும் விளையாட்டின் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு வந்தனர்.
இந்l நிலையில், இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் 6 நிமிடம் 27.45 நொடிக்குள் இலக்கை எட்டி முதலிடம் பிடித்துள்ளார். இவர்களை தொடர்ந்து ஜப்பான் அணி 7 நிமிடம் 5.91 நொடியில் இரண்டாம் இடத்தையும் பிலிப்பைன்ஸ் 7 நிமிடம் 10.97 நொடியில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்த மூன்று அணியும் வரும் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.