நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய, அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு, நாடாளுமன்றத்தில் பாராட்டு மழை பொழியப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி நிறுவனத்தால் அனுப்பப்பட்டது சந்திரயான் -3 விண்கலம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செலுத்திய இந்த விண்கலம் மாபெரும் வெற்றி பெற்றது.
பாரதப் பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் சந்திரயான் – 3 விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் சந்திரயான் -3 வெற்றி குறித்துப் பேசப்பட்டது. அப்போது திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பெயரைச் சொன்னதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மேஜை மீது கைதட்டி தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். மேலும், துணை ஜனாதிபதி ஜக்தீப் தின்கர் வீர முத்துவேலைத் தனியாக அழைத்துப் பாராட்டினார்.
சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.