மதுரையில் 5 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில், கூட்டம் அதிகரித்து பெண்கள் சிலர் மயக்கம் அடைந்து விழுந்ததால், நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.
தலைநகர் சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னையை அடுத்து மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை அண்ணா நகரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், எதிர்பார்த்ததைவிட அதிகம் பேர் கூடினர். அதாவ து, சுமார் 30,000 மேற்பட்ட பொது மக்கள் இதில் பங்கேற்றனர். பெண்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை காவல்துறையினர் பாதியில் நிறுத்த உத்தரவிட்டனர். இதனால், ஹேப்பி ஸ்ட்ரீட் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.