ஒலிம்பிக் போட்டியில் கபடி - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நம்பிக்கை
Aug 17, 2025, 11:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் கபடி – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நம்பிக்கை

Web Desk by Web Desk
Sep 24, 2023, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கும் காலம் விரைவில் வரும் என்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

பாரத தேசத்தின் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமைக்குரிய ஈஷா கிராமோத்சவம் திருவிழாவின் இறுதிப் போட்டிகள் கோவை ஈஷா யோக மையத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் ஆதியோகி முன்பு நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான வாலிபால் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த உத்தம சோழபுரம் அணி, அதே மாவட்டத்தைச் சேர்ந்த சித்தராசபுரம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த புள்ளா கவுண்டன் புதூர் அணி, கர்நாடகாவைச் சேர்ந்த மரக்கோடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மேலும், தமிழ்நாடு அளவில் நடந்த கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஈரோடு அணி, விருதுநகர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவில் ஈரோடு அணி திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் சத்குரு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு கேடயங்கள் வழங்கி கெளரவித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசுகையில், ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை 2004-ம் ஆண்டு முதல் ஈஷா நடத்தி வருகிறது. இன்று நடக்கும் 15-வது கிராமோத்சவ விழாவில் பங்கேற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் முழு நேர, தொழில்முறை விளையாட்டு வீரர்கள் கிடையாது. தினக் கூலி வேலைக்கு செல்பவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் எனப் பல விதமான வேலை செய்பவர்கள் தான் இப்போட்டியில் வீரர்களாகக் களம் கண்டு வென்றுள்ளனர். இது தான் இத்திருவிழாவின் சிறப்பு.

விளையாட்டுப் போட்டிகள் மட்டுமின்றி இங்கு 1,200 பேர் ஒன்று சேர்ந்து கும்மியாட்டத்தையும் ஆடி காட்டியுள்ளனர். இதுதவிர பல்வேறு கிராமிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இத்திருவிழாவில் நடத்தப்பட்டுள்ளது. இதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். இவை அனைத்தும் சத்குருவால் மட்டுமே சாத்தியம். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைகளை வளர்க்கும் வித்தை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்றார்.

மேலும், இந்தாண்டு 1,000 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளது. யோகா, களரி, மல்லர்கம்பம் உள்ளிட்ட 5 பாரம்பரிய கலைகளை கேலோ இந்தியா திட்டத்தில் சேர்த்துள்ளோம். இதேபோல், பாரம்பரிய விளையாட்டான கபடிப் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கும் காலமும் கூடிய விரைவில் வரும் என்றார்.

இதைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய சத்குரு, ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் 25,000 கிராமங்களிலிருந்து 60,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜாதி, மதம், ஆண், பெண், வயது என எல்லா வேறுபாடுகளையும் கடந்து அவர்கள் ஒற்றுமையுடன் விளையாடி உள்ளனர்.

போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்கத்திற்காக நாம் இந்த கிராமோத்சவத்தை நடத்தவில்லை. இதன்மூலம், இதில் பங்கெடுத்த வீரர்கள் மற்றும் பார்வையிட்ட ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் உருவாக்க இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தி உள்ளோம்.

வாழ்க்கையில் விளையாட்டு தன்மை இல்லாமல் போனால், வாழ்க்கை பெரும் சுமையாகிவிடும். குறிப்பாக, ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமப்புற மக்களின் வாழ்க்கை ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருக்க ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற அவசியம் என்றார்.

இந்த விழாவில், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் தன்ராஜ் பிள்ளை, நடிகர் சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: Anurag ThakurKhelo indiakapadi
ShareTweetSendShare
Previous Post

ரூ.4,452 கோடியில் எண்ணூர் மின் விரிவாக்கத் திட்டப்பணி: 

Next Post

ஆசிய விளையாட்டுப் போட்டி : ஆடவர் ஹாக்கி இந்தியா வெற்றி !

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies