சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல், காலிஸ்தான் தீவிரவாதி கரண்வீர் சிங் என்பவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கனடாவில் உள்ள சீக்கிய அமைப்புகள், பஞ்சாப் மாநிலத்தைத் தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைத்து காலிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக, செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான பாபர் கல்சா எனப்படும் காலிஸ்தான் அமைப்பினைச் சேர்ந்த தீவிரவாதி கரண்வீர் சிங் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் இருப்பதால், அவருக்கு எதிராக சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல், ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி தேடி வருகிறது.
இதற்கிடையே, காலிஸ்தான் தீவிரவாதி கரண்வீர் சிங், பாகிஸ்தானில் பதுங்கி இருக்கலாம் என அரியானா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.