மிலாது நபியின் கொள்கைகளை நினைவு கூர்ந்து, மனித குலத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரவித்துள்ளார்
மிலாது நபியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் மிலாது நபி திருநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நபிகள் நாயகம் அமைதி மற்றும் அன்பின் செய்தியை உலகிற்கு வழங்கியுள்ளார். நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ அவரது போதனைகள் நம்மைத் தூண்டுகின்றன.
அவரது கொள்கைகளை நினைவு கூர்ந்து, மனித குலத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.