நேப்பல்ஸ் பகுதிக்கு மேற்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 4.2 ஆக பதிவாகிள்ளது.
இத்தாலியின் நேப்பல்ஸ் பகுதிக்கு மேற்கே நேற்று அதிகாலை 3.35 மணிக்குச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்தப் பகுதியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று இத்தாலியின் நிலவியற்பியல் மற்றும் புயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இப்பகுதி ஏற்கெனவே, நிலநடுக்க அபாயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் நேப்பல்ஸ் பகுதியில் நன்கு உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.
இதேபோல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை ஒட்டிய பகுதிகளிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரத்தில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் மாகாணத்துக்கு வடமேற்கே அமைந்துள்ள மராடி நகருக்கு அருகே அதிகாலை 5.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.8-ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.