2023 ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக திருப்பதியில் பிராத்தனைச் செய்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பிர்.
இன்று அதிகாலை கெளதம் கம்பிர் தனதுக் குடும்பத்தினருடன் திருமலையை அடைந்தார். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வந்த அவருக்குக் கோயில் அதிகாரிகள் “ஸ்ரீவாரி பிரசாதம்” வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கம்பிர் இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறினார்.
மேலும் , ” இந்தியாவில் நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று நான் பிராத்தனை செய்தேன். மேலும் 140 இந்தியர்கள் இந்திய அணிக்காக பிராத்தனை செய்கிறார்கள், அவர்களின் பிராத்தனை மற்றும் வாழ்த்துக்களோடு இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிப் பெறும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.