மழையின் போது இடியும் மின்னலும் ஏற்படுவது வழக்கம் தான். நம்ம ஊரில் எல்லாம் மின்னல் மின்னினால் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும், சில நேரங்களில் அதை கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு வெளிச்சமும் கொடுக்கும். ஆனால் சவூதி அரேபிய மக்கள் அந்த மின்னலை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி என்ன அந்த வீடியோவில் ஸ்பெஷல் ?
சவூதி அரேபிய நகரத்தின் சின்னமான மக்காவின் கடிகார கோபுரத்தில், மின்னல் மின்னிய போது , ஊதா நிறத்தில் தென்பட்டது. அந்த மின்னல் பார்ப்பதற்கு கிளைகள் கொண்ட மரங்கள் பூமியிலிருந்து மேலே எழுவது போல் காட்சியளித்தது. இந்தக் காட்சி பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.