குன்னூர் மட்டுமல்ல, நீலகிரி மாவட்டம் முழுவதுமே நிறைய தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
”என் மண் என் மக்கள்” பயணம், ஊட்டி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத் தொகுதியில், மக்கள் பேரன்புடனும் ஆதரவுடனும் மகிழ்ச்சியாக நடந்தது. நீலகிரி, தேசியத்தையும், ஆன்மீகத்தையும் போற்றும் மண்.
மலைப்பகுதியின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் மண். கடந்த 2021 டிசம்பர் 8 அன்று, குன்னூரில் நடைபெற்ற கோர விபத்தில், முப்படைகளின் தலைவராக இருந்த ஜெனரல் பிபின் ராவத் காலமானார்.
அவருக்கு, வழி நெடுகிலும் நின்று, அஞ்சலியும் வீர வணக்கமும் செலுத்திய தேசியவாதிகள் நிறைந்த பகுதி குன்னூர். தேசமே மீளாத் துயரில் இருந்தபோது, குன்னூர் மக்களின் உணர்வு, அனைவருக்குமே மன நம்பிக்கையையும் மன வலிமையையும் கொடுத்தது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, குன்னூர் மக்களின் தேசப்பற்றை, பாராளுமன்றத்தில் பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.
குன்னூர் மட்டுமல்ல, நீலகிரி மாவட்டம் முழுவதுமே நிறைய தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் 2G புகழ் ஆ.ராஜா, சுற்றுலாப் பயணி வருவது போல, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தொகுதிக்கு வருகிறார்.
மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசச் சொன்னால், சனாதன தர்மத்தை தரக்குறைவாகப் பேசிக் கொண்டிருக்கிறார். காட்டு விலங்குகள் பிரச்சினை, 10000 குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சார வசதி இல்லாமல் இருப்பது, பட்டா இல்லாமல் இருப்பது, தனியார் வன உரிமைச் சட்டம் என மக்கள் பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் பேச, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், பாஜக உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சினைகளுக்காக, பாஜக இரண்டு முறை போராடி தீர்வு கண்டுள்ளது. மக்களுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் பாஜக மக்களோடு இருக்கிறது. தேயிலை விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை இன்றும் இருக்கிறது. தேயிலை ஆணையத்திடம் விலை உயர்த்திக் கொடுக்க… pic.twitter.com/WUgKpEsBvd
— K.Annamalai (@annamalai_k) September 28, 2023
கர்மவீரர் காமராஜர் அவர்கள், நீலகிரி மாவட்டத்துக்கு சிறப்புக் கவனம் எடுத்து, ஒன்பதாண்டு ஆட்சியில் பல அணைகள் கட்டினார். அதன் பலன், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு இன்று 833 மெகாவாட்.
பக்கத்து மாவட்டங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. அத்தனை தொலைநோக்குடன் திட்டங்கள் கொண்டு வந்தார் காமராஜர். ஆனால் திமுக ஆட்சியில், பெயர் அளவில் மாஸ்டர் டெவலப்மமெண்ட் ப்ளான் என்று வைத்துக் கொண்டு, காசு சம்பாதிக்கின்றார்கள். வாகன நிறுத்தம், நீலகிரி மாவட்டம் முழுவதுமே இருக்கும் பிரச்சினையாக உள்ளது.
குன்னூரில் உள்ள சர்வதேச பள்ளி, ஏழை எளிய சாதாரண மாணவர்களுக்கு எட்டாதது. இந்தியாவில் 2,78,356 மாணவர்கள் பயிலும் 625 நவோதயா பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 89% மாணவர்கள், கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
25.4% மாணவர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இல்லை. நவோதயா பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி வழங்கப்படுகிறது.
ஒரு குழந்தையின் கல்விக்கு 85,000 ரூபாய் மத்திய அரசு செலவு செய்கிறது. ஆனால், இங்குள்ள அரசியல்வாதிகள், தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் சம்பாதிக்கவும், அரசியல் செய்யவும் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க மறுக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வரும்போது, ஒரு மாவட்டத்துக்கு இரண்டு நவோதயா பள்ளிகள் கொண்டு வரப்படும் என்று உறுதி அளிக்கிறோம்.
நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சினைகளுக்காக, பாஜக இரண்டு முறை போராடி தீர்வு கண்டுள்ளது. மக்களுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் பாஜக மக்களோடு இருக்கிறது. தேயிலை விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை இன்றும் இருக்கிறது. தேயிலை ஆணையத்திடம் விலை உயர்த்திக் கொடுக்க வலியுறுத்தியிருக்கிறோம்.
தேயிலை விலை பிரச்சினையை பாஜக தீர்த்து வைக்கும் என்று உறுதி அளிக்கிறோம். நீலகிரி மாவட்டத்திற்கு தரமான மருத்துவம் கிடைக்க மருத்துவக் கல்லூரி கொடுத்திருக்கிறார் பிரதமர்.
படுகா சமூக மக்களுக்கான பழங்குடியினர் அந்தஸ்து, சொத்துக்கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மாநகராட்சி, நகராட்சி வாடகை உயர்வு, என தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக திமுக செய்துள்ள, ஏற்பட்டுள்ள அத்தனை பிரச்சினைகளையும் பாஜக சரி செய்யும்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல்வாதிகளை அண்ட விடக் கூடாது. ஊழலால் நாட்டின் வளர்ச்சி குறையும். இளைஞர்கள் கனவு நிறைவேறாது. கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என அனைத்துமே ஊழலால் பாதிக்கப்படும்.
ஆ. ராஜாவின் ஊழல் சொத்துக்களை சமீபத்தில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. வரும் பாராளுமன்ற தேர்தலில், ஆ.ராஜா எனும் ஊழல்வாதியை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கரங்களை வலுப்படுத்த தமிழகத்தில் இருந்து, பெருமளவில் பாஜக சார்பாக மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.