கோவை தடாகம் பள்ளத் தாக்கு பகுதியில் குட்டியுடன் காட்டு யானைக் கூட்டம் ஒன்று புகுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த யானைக் கூட்டம் கிராம இளைஞர்களை ஓடஓட விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை தடாகம் பள்ளத் தாக்கு பகுதியில் அமைந்துள்ளது 24 வீரபாண்டி கிராமம். இங்கு ஒரு செங்கல் சூளை உள்ளது. அந்த பகுதியில், இன்று காலை குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகள் கூட்டம், அங்கு முகாமிட்டுள்ளது.
யானையைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு வந்து, யானையை விரட்டினர்.
இதனால், யானை அங்குமிங்கும் ஓடியது. மேலும் சத்தம் போட்ட இளைஞர்களை ஓடஓட துரத்தியது. இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதனால், அச்சம் அடைந்த கிராம மக்கள், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் முன்பு, யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.