ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் கோல்ஃப் போட்டியில் அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா வெற்றி பெறாத பிரிவில் முதல் முறையை வெற்றிப் பெற்று வரலாறு படைத்துள்ளது.
இன்றுப் பெண்களுக்கான தனிநபர் கோல்ஃப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த அதிதி அசோக் பங்குபெற்றார்.
இதில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 67-66-61-73 என்ற புள்ளி கணக்கில் 2 வது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றார். இதுவே இந்திய மகளிர் கோல்ப் பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கமாகும்.
இதற்கு முன் ஆண்கள் கோல்ப் பிரிவில் 1982 ஆம் ஆண்டு லக்ஷ்மண் சிங் மற்றும் 2002 ஆம் ஆண்டு ஷிவ் கபூர் ஆகியோர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
மேலும் இந்த போட்டியில் தாய்லாந்து தங்கமும் , தென் கொரியா வெண்கலமும் பெற்றுள்ளது.