இந்தியாவின் “இந்திரி தீபாவளி கலெக்டர்ஸ் எடிசன் 2023” என்கிற சிங்கிள் மால்ட் விஸ்கி, 2023-ம் ஆண்டுக்கான “விஸ்கிஸ் ஆஃப் தி வேர்ல்ட்” விருதுகளில் “பெஸ்ட் இன் ஷோ, டபுள் கோல்ட்” விருதை வென்றிருக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள பிக்காடிலி டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தால் இந்திரி விஸ்கி தயாரிக்கப்படுகிறது. இந்த பிராண்ட் 2021-ம் ஆண்டு இந்திரி டிரினி என்கிற பெயரில் இந்தியாவின் முதல் டிரிபிள் பீப்பாய் சிங்கிள் மால்ட் என்கிற அறிமுகத்துடன் விற்பனையைத் தொடங்கியது. இதுதான் தற்போது விஸ்கிஸ் ஆஃப் தி வேர்ல்ட் விருதுகளில் பெஸ்ட் இன் ஷோ, டபுள் கோல்ட் விருதை வென்றிருக்கிறது.
இதுகுறித்து பிக்காடிலி டிஸ்டில்லரீஸ் நிறுவனர் சித்தார்த்த ஷர்மா வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இது இந்தியாவுக்கு உற்சாகமான நேரம். இந்திய விஸ்கிகள் ஒருபோதும் பின்தங்கி இருக்கவில்லை என்பது, விஸ்கிஸ் ஆஃப் தி வேர்ல்ட் விருதுகளின் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.
உலகின் சிறந்த விஸ்கி என்று மதிப்பிடப்பட்டிருப்பது இந்தியின் மிகப்பெரிய வெற்றி. இது உள்நாட்டுத் தரத்தை உலக வரைபடத்தில் வைக்கும். இதுபோன்ற புகழ்பெற்ற தளத்தால் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுவது, எங்களது கவனத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இது உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான விஸ்கிகளை விஞ்சியது குறிப்பிடத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.
இந்திய சிங்கிள் மால்ட், ஸ்காட்ச், போர்பன், கனடியன், ஆஸ்திரேலியன் மற்றும் பிரிட்டிஷ் சிங்கிள் மால்ட் உட்பட பல சர்வதேச பிராண்டுகளை மிஞ்சியது குறிப்பிடத்தக்கது. இந்த விஸ்கி கடந்த 2 ஆண்டுகளில் 14-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது என்று தி சண்டே கார்டியன் தெரிவித்திருக்கிறது.