2023-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலிய ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு, உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் திங்கட்கிழமை மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்காவின் பியரி அகோஸ்தினி, ஜெர்மனியின் பெரென்க் க்ரவுஸ், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைத்து பொருட்களிலும் காணப்படும் எலக்ட்ரான் மூலக்கூறுகளின் இயக்கவியல் ஆய்வுக்காக, ஒளியின் அட்டோசெகண்ட் துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.