ஆசியா விளையாட்டு போட்டியில் தமிழக வீராங்கனைக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
ஆசியா விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. பத்தாவது நாளில் இந்திய அணி பதக்க வேட்டையில் ஈடுபட்டு இருக்கிறது.
இதில் இன்று மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் பங்கேற்றார்.
இந்திய வீராங்கனை வித்யா ராமராஜ் 55.68 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.
இவர் ஏற்கனவே தகுதி சுற்றில் பிடி உஷாவின் தேசிய சாதனையை முறியடித்து இருந்த நிலையில் தற்போது இறுதிப்போட்டியில் பதக்கத்தை வென்றுள்ளார்