காஞ்சிபுரத்தில், பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தில் உள்ள தடுப்புகள் மீது மோதியோடு, சாலை வரை வந்ததால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு வந்தது.
மேலும், ரயில்வே தண்டவாளத்தில் உள்ள தடுப்புகள் மீது மோதியது. அப்போது, தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் அப்பளம்போல் நசுங்கியது. மேலும், அப்போது பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனால், அக்கம் பக்கத்திலிருந்தவர்கள், சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் பலரும் ஓடி வந்து பார்த்தனர்.
அதற்குள் ரயில்வே போலீசார் விரைந்து வந்து விபத்து நடத்தப் பகுதியிலிருந்த பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே கேட் போடப்பட்டிருந்தால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.