எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி என்பது பாம்பும் கீரியும் ஒன்றுசேர்வது போன்றது என்று பா.ஜ.க. எம்.பி தேஜஸ்வி சூர்யா விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இதில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த கூட்டணி குறித்து பா.ஜ.க எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறியதாவது, ‘இண்டி’ கூட்டணி என்பது பாம்பும் கீரியும் ஒன்று சேருவது போன்றது. இந்த கூட்டணி உருவாவதற்கு முன்பு அதிலுள்ள கட்சிகள் மதச்சார்பின்மை என்ற போர்வையில் மறைமுகமாக இந்தி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு போன்ற அரசியலைச் செய்தார்கள்.
ஆனால் இன்று அவர்கள் வெளிப்படையாக சனாதன கலாச்சாரம் மற்றும் சனாதன தர்மத்திற்கு எதிராகப் பேசுகிறார்கள்.
சனாதன தர்மத்தை ஒழிக்கவே இண்டிகூட்டணி உருவாக்கப்பட்டது என்று திமுக கூறுகிறது. கூட்டணியைச் சேர்ந்த இன்னொருவர் இந்து சமூகத்தை சாதி அடிப்படையில் உடைக்க முயற்சி செய்கிறார் என்று தெரிவித்தார்.