சென்னையில் பல்வேறு முக்கிய நிறுவனங்களில், வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வருகிறது. மேலும், வரி ஏய்ப்போர் மீதும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ரியல் எஸ்டேட் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் பேரில், இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சென்னையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, பூர்வாங்கரா ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடு மற்றும் அவர்கள் தொடர்புடைய அலுவலகம், வீடு ஆகியவற்றில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல, சுமார் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.