முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனியை நடிகர் ரன்வீர் சிங் சந்தித்துள்ளார்.
டோலிவுட்டின் முன்னணி நடிகரான ராம் சரண் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்தித்ததைத் தொடர்ந்து இன்று நடிகர் ரன்வீர் சிங் தோனியை சந்தித்துள்ளார்.
ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் ரன்வீர் சிங் தோனியின் தோளில் கைபோட்டுக் கொண்டு இருப்பது போல் ஒரு படமும், ரன்வீர் சிங் தோனிக்கு முத்தம் கொடுப்பது போல் மற்றொரு படமும் வெளியிட்டுள்ளார்.
ரன்வீர் சிங்கும் தோனியும் அடிக்கடி நேரத்தை ஒன்றாக செலவிடுவார்கள். கடந்த ஆண்டு இருவரும் ஒன்றாக கால்பந்து விளையாடி வந்தனர். இந்த கானொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. தொடர்ந்து இந்த முறை சந்தித்தது ஏன் என்ற காரணம் அறியப்படவில்லை.