ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான வில்வித்தைப் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பாரத பிரதமர் மோடி வாழ்த்து.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைப்பெற்று வருகிறது. இதில் மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் ஜோதி, அதிதி மற்றும் பிரனீத் ஆகியோர் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளனர்.
தங்கம் வென்ற வீராங்கனைகளைப் பாராட்டி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக் குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜோதி, அதிதி மற்றும் பிரனீத் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். அவர்களின் குறைப்பாடற்றச் செயல்திறன், கவனம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை நம் தேசத்தைப் பெருமைப் படுத்தியுள்ளது. இந்த வெற்றி அவர்களின் சிறப்பான திறமை மற்றும் குழுப்பணிக்கு சான்றாகும் ” என்று பாராட்டியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர், ” ஆசிய விளையாட்டு மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்ற ஜோதி, அதிதி மற்றும் பிரனீத் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். உங்கள் சாதனையால் நம் தேசம் பெருமைக் கொள்கிறது ” என்று பதிவிட்டுள்ளார்.