2023-ஆம் ஆண்டு இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு, எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு, உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
அதன்படி 2023-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் திங்கட்கிழமை மருத்துவத்துறைக்கான நோபல் பரிசும், செவ்வாய்க் கிழமை இயற்பியல் துறைக்கான நோபல் பரிசும், புதன் கிழமை வேதியியல் துறைக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று, இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிதை, சிறுகதைகள், குழந்தை இலக்கியம், கட்டுரைகள், நாடக வசனம் என பன்முக இலக்கியத் தன்மை வாய்ந்தவர் ஜான் போஸ் என்பது குறிப்பிடத்தக்கது.