ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஸ்குவாஷ் பிரிவில் சவுரவ் கோசல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
சீனாவின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இன்று ஆண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவு நடைப்பெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக 37 வயதான சவுரவ் கோசல் பங்குபெற்றார்.
இந்த இறுதிப் போட்டியில் இவருடன் மலேசியாவின் என்ஜி ஈன் யோவ் விளையாடினர். இருவருக்கும் இடையேயான போட்டியில் மலேசியா வீரர் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதால் இந்திய வீரருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
மேலும் இதற்கு முன்பு நடைப்பெற்ற ஆண்களுக்கான ஸ்குவாஷ் குழு பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்திய அணி சார்பாக விளையாடிய சவுரவ் கோசல் வெள்ளிப் பதக்கம் வென்றதுக் குறிப்பிடத்தக்கது.