கடந்த 60 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை வென்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வீரர்களின் அசைக்க முடியாத உறுதி, இடைவிடாத உத்வேகம் மற்றும் கடின உழைப்பை பிரதமர் மோடி பாராட்டினார்.
What a historic achievement for India at the Asian Games!
The entire nation is overjoyed that our incredible athletes have brought home the highest ever total of 107 medals, the best ever performance in the last 60 years.
The unwavering determination, relentless spirit and hard… pic.twitter.com/t8eHsRvojl
— Narendra Modi (@narendramodi) October 8, 2023
இது குறித்து பிரதமர் தனது எக்ஸ் பதிவில்,
“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சாதனை!
நமது வியக்கத்தக்க விளையாட்டு வீரர்கள் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை வென்றதில் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதி, இடைவிடாத உத்வேகம், கடின உழைப்பு ஆகியவை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. அவர்களது வெற்றிகள், நாம் நினைவில் கொள்ள வேண்டிய தருணங்களையும், நம் அனைவருக்கும் உத்வேகத்தையும் அளித்துள்ளதுடன், மேலும் சிறந்த செயல்பாட்டிற்கான நமது உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.