ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் இன்று விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்யைத் தேர்வுச் செய்தது. இதன் படி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கின்னார்.
இதில் மிட்செல் மார்ஷ் மூன்றாவது ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதனால் இவரை அடுத்து ஸ்மித் களமிறங்கினார். டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் கூட்டணி சிறப்பாக ரன்களை எடுத்து வந்த நிலையில் 17 வது ஓவரில் டேவிட் வார்னர் 41 ரன்களில் குலதீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த சமயத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 74/2 ஆகா இருந்தது.
அடுத்ததாக மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கினார். அடுத்த 10 ஓவர்கள் அவரை ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலிய அணி விளையாடி வந்தது பிறகு 27 வது ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் 46 ரன்களுக்கு ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே மார்னஸ் லாபுசாக்னே ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்து போன அடுத்த 2 வது பந்திலேயே அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜாவின் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் விழா இறுதியாக ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்களும், குலதீப் யாதவ் 2 விக்கெட்களும், அஸ்வின், சிராஜ், ஹர்திக் பாண்டிய ஆகியோர் தலா 1 விக்கெட்களும் எடுத்தனர்.
இதன் மூலம் இந்தியாவிற்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக உள்ளது.