நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் முற்பகல் செரியாபனி பயணிகள் கப்பல் நாகை துறைமுகத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று காலை சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அதாவது, நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறை முகத்திற்குச் சோதனை ஓட்டமாகச் செரியாபனி பயணிகள் கப்பல் சென்றது. இதில், 14 துறைமுக அதிகாரிகள் சென்றனர். அப்போது, நாகப்பட்டினம் லைட் ஹவுஸ் அருகே கடற்கரையோரம் பயணிகள் கப்பல் செல்வதைப் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இதேபோல, இன்றும், அதாவது அக்டோபர் 9 -ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறை முகத்திற்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல், அதாவது அக்டோபர் 10 -ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனால், தமிழகம் மற்றும் இலங்கை வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.