உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 3 அரைசதங்களை அடித்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் ஹைதராபாத்தில் விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வுச் செய்தது. அதன் படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியில் மூன்று வீரர்கள் அரைசதம் எடுத்து அசதியுள்ளனர்.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய வில் எங் 7 பௌண்டரீஸ், 2 சிக்சர்கள் உட்பட மொத்தமாக 80 பந்துகளில் 70 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 3 பௌண்டரீஸ், 1 சிக்சர் உட்பட மொத்தமாக 51 பந்துகளில் 51 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
மூன்றாவது அரைசதம் அடித்த டாம் லாதம் 6 பௌண்டரீஸ், 1 சிக்சர் உட்பட மொத்தமாக 46 பந்துகளில் 53 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் நியூசிலாந்து அணியில் 3 அரைசதங்கள் பதிவாகியுள்ளது. இதில் மிட்செல் 47 பந்துகளில் 48 ரன்களை அடித்து அரைசதத்தை நெருங்கிய நேரத்தில் ஆட்டமிழந்ததால் அரைசதம் எடுக்க முடியாமல் போனது.