ஆயுஷ் மருந்துகள்: குணப்படுத்தும் என விளம்பரம் செய்யக்கூடாது!
Apr 3, 2026, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுஷ் மருந்துகள்: குணப்படுத்தும் என விளம்பரம் செய்யக்கூடாது!

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுஷ் மருந்துகளை, குறிப்பிட்ட நோய்களுக்குப் பரிந்துரை செய்யலாமே தவிர, அந்த மருந்துகள் நோயைக் குணப்படுத்தும் என, விளம்பரம் செய்யக்கூடாது என்று இந்திய மருத்துவ மாநில மருந்து உரிம அலுவலர் தெரிவித்துள்ளார்.

உலகில் அதிகரித்து வரும் சர்க்கரை நோய், இதய நோய், இரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான நோய்களுக்கு, அலோபதி மருத்துவத்தைப் போல், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன.

அலோபதி மருத்துவத்தைப் போன்று, ஆயுஷ் மருத்துவத்தில் போதிய அளவு ஆராய்ச்சி செய்யாததால், பல நோய்களுக்கு நேரடியாகப் பரிந்துரைக்க முடியாத சூழல் உள்ளது. அதேநேரம், பாரம்பரிய மருந்துகள் வாயிலாகச் சர்க்கரை நோய், புற்றுநோய், இரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த முடியும் என்று சிலர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

அதாவது, கேரள மாநில நாளிதழ் ஒன்றில், தனியார் நிறுவனம் ஒன்று, அலோபதி தவறாக வழிகாட்டுகிறது என்ற தலைப்பில், ஒரு விளம்பரம் வெளியிட்டது. அந்த விளம்பரத்தில், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளிட்ட தீராத நோய்களை, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாயிலாக குணப்படுத்த முடியும். மேலும், சர்க்கரை நோய்க்கு இன்சுலின் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து கேரள மாநில ஆயுர்வேத மருந்து கட்டுப்பாட்டுத் துறை, சம்பந்தப்பட்ட நாளிதழிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்திலும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக, நம்பத்தன்மையற்ற விளம்பரங்கள் அதிகம் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில மருந்து உரிம அலுவலர்கள் அனுமதி பெறாத மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இதுகுறித்து இந்திய மருத்துவ மாநில மருந்து உரிம அலுவலர் மானேக்சா கூறியதாவது, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட, 142 நோய்களுக்கு, மருந்துகள் இருந்தால் அவற்றைப் பரிந்துரை செய்யலாம். ஆனால், குணப்படுத்தும் என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்யக்கூடாது. மற்ற மருத்துவச் சிகிச்சை முறைகளைத் தாழ்த்தும் வகையிலான விளம்பரமும் செய்யக்கூடாது. புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags: Medicalmedicine
ShareTweetSendShare
Previous Post

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து: திடீர் ஒத்திவைப்பு!

Next Post

பெங்களூரு – விசாகப்பட்டினம்: சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு!

Related News

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

ஈரானில் மிகப்பெரிய தொங்கு பாலம் மீது தாக்குதல் – 8 பேர் பலி!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்!

ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி காவலருக்கு கால் முறிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies