உலகக் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து அபார வெற்றி !
Apr 3, 2026, 08:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து அபார வெற்றி !

Murugesan M by Murugesan M
Oct 10, 2023, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றது.

ஒரு நாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் ஹைதராபாத்தில் விளையாடி வருகிறது.

இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வுச் செய்தது. அதன் படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் டெவோன் கான்வே 40 பந்துகளில் 32 ரன்களுக்கு ரோலோஃப் வான் டெர் மெர்வேவின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 51 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக வில் யங் 80 பந்துகளில் 70 ரன்களை எடுத்து பால் வான் மீகெரென் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 184/3 ஆகா இருந்தது. அடுத்ததாக களமிறங்கிய டேரில் மிட்செல் 47 பந்துகளில் 48 ரன்களை அடித்து பால் வான் மீகெரென் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய டாம் லாதம் 46 பந்துகளில் அரைசதம் எடுத்து ஆர்யன் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்களை எடுத்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.

323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் மற்றும் மாஸ் ஓ களமிறங்கினர். விக்ரம்ஜித் 12 ரன்களுக்கும் மாஸ் ஓ 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அடுத்தாக களமிறங்கிய கொலின் அக்கர்மேன் சிறப்பாக விளையாடி 73 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 46 வது ஓவரில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து நெதர்லாந்து அணி ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 5 விக்கெட்களையும் மாட் ஹென்றி 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

இதனால் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 5 விக்கெட்களை எடுத்த மிட்செல் சான்ட்னருக்கு வழங்கப்பட்டது.

Tags: ICC World Cupnew zealand cricket
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரு – விசாகப்பட்டினம்: சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு!

Next Post

இந்தியா, சவுதி அரேபியா இடையே மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Related News

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – பியூஷ் கோயல்

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை, பென்னாகரம் -ஜிகேஎம் தமிழ் குமரன் போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் – அண்ணாமலை வாழ்த்து!

பாஜக வேட்பாளர் பட்டியல் – சாத்தூர் நயினார் நாகேந்திரன், அவிநாசி (தனி) – எல். முருகன்!

கோவை கக்குராயன் மலை மலை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சி – நாராயணன் திருப்பதி விளக்கம்!

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

திமுக ஆட்சியில் 18000 போக்சோ வழக்குகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

உத்தரகண்டை பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

கோவில் திருவிழாக்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது – தேர்தல் ஆணையத்தில் இந்து முன்னணி மனு!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies