உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 2 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் 7 வது போட்டி தர்மஷாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் வங்காளதேசம் மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்க்ஸை முடித்த இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 364 ரன்களை எடுத்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் வங்காளதேச அணி விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணி வீரர்கள் 2 அரைசதம் மற்றும் ஒரு சதத்தை அடித்துள்ளனர். அதில் டேவிட் மாலன் 16 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 107 பந்துகளில் 140 ரன்களை எடுத்து மஹீடி ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜானி பேர்ஸ்டோவ் 8 பௌண்டரீஸ் அடித்து 59 பந்துகளில் 52 ரன்களை எடுத்து சாகிப் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 8 பௌண்டரீஸ் மற்றும் ஒரு சிக்சர் அடித்து மொத்தமாக 68 பந்துகளில் 82 ரன்களை எடுத்து இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தார்.