குழந்தைகளின் தொலைபேசிகளில் இருந்து டிக் டாக் போன்ற செயலிகளை அகற்ற வேண்டும் என்று இஸ்ரேல் பெற்றோர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஹமாஸுக்கு எதிரான போர் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள பள்ளிகள், பெற்றோரிடம் தங்கள் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஹமாஸ் தீவிரவாதிகள், பணயக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை தூக்கிலிடப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பக்கூடும் என்ற கவலையினால் இத்தகைய அறிவுறுத்தல் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு இசை நிகழ்ச்சியில், தீவிரவாதிகள் பொதுமக்களை தாக்குவதையும், கடத்துவதையும் காட்டும் வீடியோக்கள் மற்றும் புகை படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள பெற்றோர்கள் சங்கம், அதன் உறுப்பினர்களிடம் அவர்களின் குழந்தைகளின் தொலைபேசிகளில் இருந்து டிக் டாக் போன்ற செயலிகளை அகற்றுமாறு வலியுறுத்தியது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள சில யூத பள்ளிகளும் பெற்றோர்களிடம் இதேப் போன்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றன.
அதில் நியூ ஜெர்சியில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர், ” இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடக பயன்பாடுகளை தங்கள் குழந்தைகளின் தொலை பேசிகளிலிருந்து முடக்குமாறு பெற்றோரை நாங்கள் எச்சரிக்கிறோம்” என்று மின்னஞ்சலில் எழுதியுள்ளார்.