காசாவில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்ற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், 10 லட்சம் பேரின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே உச்சக்கட்ட பேர் நடைபெற்று வருகிறது. இதனால், காசா நகரம் எங்கும் குண்டு வீச்சும், மரண ஓலங்களும் ஒலித்து வருகிறது. அதேபோல, இஸ்ரேல் மீது காசா தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதலால் இஸ்ரேலின் ஒரு சில பகுதிகள் உருக்குலைந்துபோய் உள்ளன.
மேலும், இஸ்ரேலைச் சேர்ந்த பயணக்கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் பயணக்கைதிகளாக பிடித்துவைத்துக் கொண்டுள்ளனர். சிலரைச் சுட்டுக் கொன்றனர். இதனால், இஸ்ரேல் காசா மீது ஆக்ரோஷ தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பேரழிவுகளைத் தரும் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த உத்தரவை இஸ்ரேல் திரும்பப் பெறவேண்டும் என ஐநா கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், இஸ்ரேல் இதனைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனத் தனது பிடிவாதத்தில் உறுதியாக உள்ளது. மேலும், இஸ்ரேல் உடன் இணைந்து ஹமாஸ் படை மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா எந்த நேரமும் தயாராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.