உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றையப் போட்டியில் மோசமாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் 191 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாடி வருகிறது.
கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யதது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் களமிறங்கினர். இதில் 8 வது ஓவரில் அப்துல்லா ஷபீக் 24 பந்துகளில் 20 ரன்களை எடுத்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக இமாம்-உல்-ஹக் 38 பந்துகளில் 36 ரன்களை எடுத்து ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்த நிலையில் பாபர் ஆசாம் 58 பந்துகளில் அரைசதம் அடித்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். ரிஸ்வான் 69 பந்துகளில் 49 ரன்களை எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் 2, 4, 6 என ஒரு இலக்கு ரங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 23 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
இந்தியா அணியில் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, சிராஜ், குலதீப் யாதவ் என அனைவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
இதனால் இந்திய அணிக்கு 192 ரன்கள் மட்டுமே இலக்காக உள்ளது