கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலின் பதில் தாக்குதல் காரணமாக, வடக்கு காசாவை விட்டு லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித்தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா அல் மசினி கொல்லப்பட்டார்.
இதனிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போரை விரைவாக முடித்து அமைதியை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை அந்நாட்டிற்கு செல்கிறார். இதனிடையே ஹாமாஸ் அமைப்பினர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 200 முதல் 250 பேர் பணயகைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.