ஊசி மூலம் ஆண்களுக்கு கருத்தடை செய்யும் மருத்துவ மூன்றாம் கட்ட ஆராய்ச்சி முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நிறைவு செய்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஊசி செலுத்துவதன் மூலம் ஆண்களுக்குக் கருத்தடை செய்யும், மருத்துவ பரிசோதனையைத் தொடக்கியது. ஏற்கனவே இரண்டு கட்ட ஆராய்ச்சி பரிசோதனைகள் நிறைவு பெற்றன.
இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள 25 முதல் 40 வயதுடைய 303 ஆண்களுக்கு உரிய மருத்துவ வழிகாட்டுதலின் கீழ், மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.
உலக நாடுகள் பலவும் ஆண்களுக்கான கருத்தடை ஊசி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்தபோதும், அவை அனைத்தும் தோல்விகரமாகவும், பக்கவிளைவுகளுடனும் அறியப்பட்ட நிலையில், ஐசிஎம்ஆர் உருவாக்கி இருக்கும் ஆண்களுக்கான கருத்தடை ஊசி முக்கிய சாதனையாக அமைந்துள்ளது. இதுகுறித்த பரிசோதனை கண்டுபிடிப்புகள், கடந்த மாதம் சர்வதேச ஆண்ட்ரோலஜி இதழில் வெளியிடப்பட்டன.