இந்தியாவிலேயே மிகவும் வலிமையான கட்சியான பாஜகவில், பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக அறியப்படும் மூத்த தலைவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அக்டோபர் 22 -ம் தேதி பிறந்த அவருக்கு இன்று வயது 59. அவரது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் ஏன், உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், பாஜக தொண்டர்கள் எனப் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
சரி, அமித் ஷாவை அனைவருக்கும் பிடித்துப்போகக் காரணம் எனக் கேள்வி எழுப்பினால், இப்படித்தான் பதில் கிடைக்கிறது. அதாவது, கடந்த 2014 வரை, குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சராக மட்டுமே அறியப்பட்ட இவர், 2013-14 -ல் பாஜக பொதுச் செயலாளராக உயர்ந்தார்.
மக்கள் அர்ப்பணிப்புக்கு என்றே உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ்-ல் மிகுந்த ஈடுபாடு கொண்டார். கட்சி உறுப்பினர்களைச் சேர்க்க ஸ்மார்ட்-ஃபோன்களைப் பயன்படுத்தும் முதல் அரசியல் கட்சியாக பாஜகவை உருவாக்கினார்.
ஜனசங்கத்தின் 10 நிறுவன உறுப்பினர்களிலிருந்து, பாரதத்தின் ஒரே சித்தாந்த கட்சியாகவும், பாரத அளவில் பல கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகவும் பாஜகவை உருவாக்கினார்.
சித்தாந்தத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு, 24 மணி நேரம் ஓய்வில்லா உழைப்பு, எதிரிகளைத் திணறடிக்கும் அரசியல் வியூகம், தேர்தல் வெற்றி சூத்திரம் என அரசியல் சாணக்கியராகத் திகழ்ந்து வருகிறார். இதுவே அமித் ஷா என்ற மாபெரும் மனிதனின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
பாஜக என்ற கட்சி இன்று மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டவர் சாட்சாத் அமித் ஷாவையே சேரும். இதனாலே, இன்று உலகமே போற்றப்படும் பாஜக தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார்.