ஆயுத பூஜையை முன்னிட்டு, 23-ம் தேதியான திங்கள்கிழமை, சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பில், ஆயுத பூஜையை முன்னிட்டு, 23-ம் தேதியான திங்கள்கிழமை, சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக பொது விடுமுறை நாள்களில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் , நாளை அதாவது 23 -ம் தேதி சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
எனவே, சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் விரைவு மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.