இராஜராஜ சோழன் காலாட்படை, குதிரைப்படை, யானை படை, மற்றும் வலிமையான கப்பற்படையும் உடையவராக விளங்கினார் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று கொண்டாடப்படும் மாமன்னர் இராஜராஜ சோழன் அவர்களது சதய விழா வெகு சிறப்பாக நடந்தேற, தமிழக பாஜக
சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில் கொண்டாடப்படும் மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களது சதய விழா வெகு சிறப்பாக நடந்தேற, @BJP4Tamilnadu சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சோழ மரபின் பொற்காலமான மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சியில், மக்கள் நலன், நுண்கலை, கட்டிடக்கலை, விவசாயம் என… pic.twitter.com/cVAS7sFatb
— K.Annamalai (@annamalai_k) October 25, 2023
சோழ மரபின் பொற்காலமான மாமன்னர் இராஜராஜ சோழன் ஆட்சியில், மக்கள் நலன், நுண்கலை, கட்டிடக்கலை, விவசாயம் என அனைத்துத் துறைகளும் சிறந்து விளங்கியது.
காலாட்படை, குதிரைப்படை, யானை படை, மற்றும் வலிமையான கப்பற்படையும் உடையவராக விளங்கினார். உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர்.
ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடி வரும் சதய விழா, மாமன்னர் ராஜராஜ சோழன் புகழைக் கூறும். அனைவரும் மகிழ்வுடன் சதய விழா கொண்டாட மனமார்ந்த வாழ்த்துக்கள் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.