பாரா ஆசியா விளையாட்டு போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 4-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் அற்புதமாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுவரை இந்தியா அதிகபட்சமாக கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தமாக 72 பதக்கங்களை வென்றிருந்தது.
அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் முறையாக 100 பதக்கங்களை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதுவரை 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தமாக 102 பதக்கங்களை வென்று நம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் நம் தேசத்திற்கு பெருமையை தேடி தந்துள்ளனர்.