வெங்காயத்தின் அகில இந்திய சில்லறை விற்பனை, வெள்ளிக்கிழமை ஒரு கிலோ ரூபாய் 47 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் வெங்காயத்தின் சில்லறை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் தீபாவளிக்குப் பிறகும் வெங்காயத்தின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெங்காயத்தின் மொத்த விற்பனை நவராத்திரியின் போது கிலோ ரூபாய் 35 விற்கப்பட்ட நிலையில், தற்போது கிலோ 70 முதல் 80 ரூபாயை எட்டியுள்ளது.
தீபாவளிக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு புதிய வெங்காய வரத்து வரும் என்பதால், விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை ஆண்டுக்கு 1 முதல் 2 மாதங்களுக்கு விலை உயர்கிறது.
இந்த பருவத்தில் நடவு செய்யப்பட்டுள்ள வெங்காயம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாலும், விநியோகம் அதிகரித்து இருப்பதாலும், மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் அதிகாரி கூறி உள்ளார்.
மத்திய அரசின் சார்பில், சில்லறை சந்தைகளின் மூலம், பொதுமக்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 25 விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.