சாக்லேட்டில் உலகக்கோப்பை வடிவமைத்த பேஸ்ட்ரி செஃப் ராகேஷ் சாஹு.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச நாடுகளில் இருந்து 10 நாடுகள் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறது.
இதன் புள்ளி பட்டியலில் இந்தியா விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நகை வியாபாரி ஒருவர் 0.9 கிராம் எடையில் தங்கத்திலான உலகக்கோப்பை மாதிரியை வடிவமைத்தார்.
அதைத் தொடர்ந்து தற்போது ஒடிசாவில் பேஸ்ட்ரி செஃப் ராகேஷ் சாஹு மற்றும் அவரது 8 பேர் கொண்ட குழு, இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை-2023 கோப்பையை சாக்லேட்டில் வடிவமைத்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பேஸ்ட்ரி செஃப் ராகேஷ் சாஹு, ” இந்திய அணியை உற்சாகப்படுத்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் கோப்பையை சாக்லேட்டில் நாங்கள் வடிவமைத்துள்ளோம். கோப்பையை மேலிருந்து கீழ்வரை முடிக்க எங்களுக்கு மூன்று நாட்கள் ஆனது மேலும் இது மிகவும் கடினமாக இருந்தது.
கோப்பையில் இருக்கும் மூன்று தூண்கள் மற்றும் பந்து ஆகியவை வடிவமைப்பது சவாலாக இருந்தது ஏனென்றால் ஒரு பாதி வடிவமைத்தற்குள், வடிவமைத்த பாதி உருகிவிடும் ஆகையால் அதனை உருகாமல் பார்த்து வடிவமைப்பது சவாலாக இருந்தது” என்று தெரிவித்தார்.
மேலும் இந்த சாக்லேட் உலகக்கோப்பை கிரிக்கெட் இரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுப் பெற்று வருகிறது.