பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து, மத்திய அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் பதிவில், “பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் தலைமையில் இருந்த, இந்தியத் தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர். ஏழை எளிய மக்களின் நலனுக்காக போராடியவர்.
தேசியவாதி, தலைசிறந்த பேச்சாளர், ஆன்மீகவாதியான ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாளில் இன்று, டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரின் திருஉருவச் சிலைக்கு, பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சங்கீதா யாதவ் மற்றும் தமிழ் மக்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” என்று பதிவிட்டுள்ளார்.