இந்திய வீரர்கள் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று பேர் அரைசதம் விளாசி உள்ளனர்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி மும்பையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று பேர் அரைசதம் விளாசி உள்ளனர்.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா முதல் பந்தில் 4 அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் மற்றொரு தொடக்க வீரரான கில் சிறப்பாக விளையாடி வந்தனர்.
இருவரும் பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்கள் என அடித்து இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்தை தெறிக்கவிட்டனர்.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் 11 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து இலங்கை பந்துவீச்சாளர்களை கதறவிட்டுள்ளார்.
அதேபோல் விராட் கோலியும் தனது மாஸ்டர் பிளாஸ்டர் ஆட்டத்தை காண்பித்து 11 பௌண்டரீஸ் அடித்துள்ளார்.
இறுதியாக சுப்மன் கில் 30 வது ஓவரில் 92 பந்துகளுக்கு 92 ரன்களை அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டால் அரைசதத்துடன் அணியின் ஸ்கோர் உயர்த்தி உள்ளார்.
அதேபோல் விராட் கோலி 31 வது ஓவரில் 94 பந்துகளில் 88 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
குறைந்த பந்திலேயே அரைசதத்தை கடந்த ஷ்ரேயாஸ் சதம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 56 பந்துகளில் 82 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 300 ரன்களை கடந்துள்ளது என்றே சொல்லலாம். ஸ்ரேயாஸ் ஐயர் 6 சிக்சர்கள் மற்றும் 3 பௌண்டரீஸ் அடித்து மும்பை மைதானத்தையே அதிரவிட்டுளார் என்றே சொல்லலாம்.