ராகுகால அமைச்சர் என உடன் பிறப்புகளால் போற்றி புகழப்படும் அமைச்சர்தான், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.
இந்த ராகுகால அமைச்சருக்குச் சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள பங்களா, பொறியியல் கல்லூரிகளில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், ராகுகால அமைச்சருக்கு நெருக்கமானவர்கள், பினாமிகளையும் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கி வருகின்றது வருமானவரித்துறை.
அந்த வகையில், அமைச்சர் எ.வ.வேலின் பினாமிகளில் ஒருவர்தான் இந்த மீனா ஜெயக்குமார். இவர், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். கோவையில் ராமநாதபுரம் – நஞ்சுண்டாபுரம் சாலையில் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் குடியிருந்து வருகிறார்.
இன்று காலை அவரது வீட்டிற்கு 3 வாகனங்களில் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மீனா ஜெயக்குமார் அமைச்சர் எ.வ.வேலின் உறவினராவார். அதுமட்டுமல்ல, பினாமி என்றும் கூறப்படுகிறது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில், ராகு கால அமைச்சரின் பரிந்துரையின் பேரில், கோவை மாநகரத்தந்தை வேட்பாளர் பட்டியலில் மீனா ஜெயக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், பத்து ரூபாய் அமைச்சரான செந்தில் பாலாஜி கொங்கு மண்டல பொறுப்பாளர் ஆனதால், மீனாவின் பெயர் மிஸ்ஸானது.
அத்தோடு, மீனாவின் கணவர் ஜெயக்குமார், எ.வ.வேலுவின் உதவியோடு ரியல் பண்ணைத்தோட்டம் தொழில் செய்து வருகிறார் என ஒரு பேச்சு உலா வந்தது. அத்துடன், சிங்காநல்லூர் திமுக பகுதி செயலாளராகவும் கட்சி பதவியில் உள்ளார். அவரது அலுவலகம், அவருக்கு வலது, இடது என வலம் வரும் எஸ்.எம். சுவாமி என்பவரையும் அமுக்கி, அவரது வீட்டிலும் சோதனையை விரிவுபடுத்தியுள்ளது வருமானவரித்துறை. இதனால், அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் திமுக பிரபலங்கள் உறைந்துபோய் உள்ளனர்.