வெள்ளிக்கிழமை என்றாலே எல்லோரும் ஒரு மகிழ்ச்சி, காரணம், எல்லா நல்ல காரியங்களையும் செய்ய உகந்த நாள் என்பதால், இதனால்தான் என்னவோ, வருமானவரித்துறையும் செண்டிமென்டாக வெள்ளிக்கிழமையை தேர்வு செய்துள்ளது.
இன்று ஒரு சில அரசியல் பிரபலங்கள் வீட்டிலும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகங்களிலும் தொழில் அதிபர்களை குறித்து வைத்து ஐ.டி. ரெய்டு மேளாவை துவங்கியுள்ளது.
தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் என்றால்x அது கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் அது அப்பாசாமி ரியல் எஸ்டேட் என்று. அந்த அளவு பேமஸ்.
கடந்த 1950 -ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்தது அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம். ஆனால், சென்னையில் 1960 -களியிலேயே அடுக்குமாடிக் குடியிருப்பை அறிமுகப்படுத்திய பெருமை இந்த நிறுவனத்தைச் சேரும்.
குறிப்பாக, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தனது ரியல் எஸ்டேட் மூலம் சிறிய அளவிலான நகரங்களையும் உருவாக்கியது.
இந்நிலையில், இந்த நிறுவனம் வரி பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இன்று காலை முதல் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனர் வீடுகள், அலுவலகங்கள் என நாலா திசைகளிலும் ஐ.டி. ரெய்டு நடந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல், சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள, ரெசிடென்சி ஓட்டலில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் உரிமையாளர் அப்பாசாமியின் மகன்தான் இந்த ரவி. இவர்தான் ரெசிடென்சி ஓட்டலின் உரிமையாளர். அதனால்தான், ரெசிடென்சி ஓட்டலில் வருமானவரித்துறை புகுந்து சல்லடை போட்டுச் சலித்து வருகிறது.
இதனால், தொழில் அதிபர்கள் பலரும் மிரண்டு போய் உள்ளனர்.