உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்றையப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா?
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி லக்னோவில் ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானதில் நடைபெறவுள்ளது.
இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடவுள்ளன. இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய 6 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றிப் பெற்றும், 3 போட்டிகளில் தோல்வியடைத்தும் புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில உள்ளது.
மேலும் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் புள்ளியில் நியூசிலாந்து அணிக்கு சமமாக இருக்கும் ஆகையால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.
நெதர்லாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றிப் பெற்றும், 4 போட்டியில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.
இந்தப் போட்டியில் நெதர்லாந்து இன்னும் இரண்டு வெற்றிகள் பெற்றால், முதல் எட்டு இடங்களுக்கு முன்னேறி 2025 இல் ICC சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறவும் உதவும்.
இன்றுப் போட்டி நடைபெறும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் உள்ள மேற்பரப்பு பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதன்படி, சுழற்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சு மூலம் பல ஜாலங்கள் செய்வார்கள். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து, இலக்கை துரத்துவது சிறப்பானதாக இருக்கும்.
இரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ஆப்கானிஸ்தான் அணி 7 முறையும் நெதர்லாந்து அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் ஆப்கானிஸ்தான் அணி 74% வெற்றி பெரும் என்றும், நெதர்லாந்து அணி 26% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.