தேசிய விளையாட்டில் தமிழக வீரர் பிரதீப் செந்தில் குமார் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
37வது தேசிய விளையாட்டு போட்டியை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கோவாவில் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு உள்ளனர். அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியானது நவம்பர் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் பிரதீப் செந்தில் குமார் 1 நிமிடம் 48.10 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் இந்தப் போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த ஷகீல் என்பவர் 1 நிமிடம் 48.65 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
SSCB – யை சேர்ந்த பிரகாஷ் கடடே 1 நிமிடம் 48.75 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.